தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா உறுதியானது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,917 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகினர். பெருந்தொற்றுக்கு மேலும் 32 பேர் பலியான நிலையில், 20 ஆயிரத்து 225 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 209ஆக பதிவானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 167 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில், 121 பேருக்கும், கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.