ஆப்கானிஸ்தானின் 46 வானூர்திகள் வலுக்கட்டாயமாகத் தரையிறக்கியதாக உஸ்பெக்கிஸ்தான் தகவல்
Published : Aug 17, 2021 6:04 PM
ஆப்கானிஸ்தானின் 46 வானூர்திகள் வலுக்கட்டாயமாகத் தரையிறக்கியதாக உஸ்பெக்கிஸ்தான் தகவல்
Aug 17, 2021 6:04 PM
ஆப்கானிஸ்தானின் 22 ராணுவ விமானங்கள், 24 ராணுவ ஹெலிகாப்டர்களை வலுக்கட்டாயமாகத் தரையிறக்கியதாக, உஸ்பெக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
அந்த 46 வானூர்திகளும், 585 வீரர்களுடன் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக தங்களது எல்லையை கடக்க முயற்சி செய்ததாகவும், எனவே அவற்றை டெர்மெஸ் விமான நிலையத்தில் வலுக்கட்டாயமாக தரையிறக்கியதாகவும் உஸ்பெக்கிஸ்தான் கூறியுள்ளது.
ஒரு ஆப்கன் போர் விமானத்தை தரையிறக்குவதற்கான முயற்சியில், அந்த விமானம் உஸ்பெக்கிஸ்தான் அரசு விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இரு விமானங்களின் பைலட்டுகளும் பாராசூட் உதவியுடன் குதித்து தப்பித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.