​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிசைமாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு.. தொட்டாலே உதிரும் சிமெண்ட் பூச்சுகள்..! அச்சத்துடன் வாழும் குடியிருப்புவாசிகள்

Published : Aug 17, 2021 4:43 PM



குடிசைமாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு.. தொட்டாலே உதிரும் சிமெண்ட் பூச்சுகள்..! அச்சத்துடன் வாழும் குடியிருப்புவாசிகள்

Aug 17, 2021 4:43 PM

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியம் மூலமாக ஒதுக்கப்பட்ட புதிய அடுக்குமாடிக் கட்டிட வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் உயிர் பயத்தோடு அங்கு வாழ்ந்து வருவதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு கரை ஓர குடிசைவாழ் மக்களுக்காக புளியந்தோப்பு கேசவபிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2018 முதல் 2021 வரை இரண்டு கட்டங்களாக அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியது. 9 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் 946 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அண்மையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

ஆனால் சுற்றுச்சுவர், வெளிப்புறச்சுவர், உள்சுவர், மேற்கூரை என எங்கே கை வைத்தாலும் சிமெண்ட் பூச்சு அப்படியே உதிர்வதாகக் கூறும் குடியிருப்புவாசிகள், அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.