நியூசிலாந்தில் ஆறு மாதங்களுக்குப் பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் கடந்த 6 மாதங்களாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாத நிலையில், ஆக்லாந்தைச் சேர்ந்த 58 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து பிரதமர் ஜெசிண்டா உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவர் ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் நகரங்களில் தங்கியதால் இவ்விரு நகரங்களுக்கும் 7 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.