தாலிபன்களை தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
தாலிபன்களை தீவிரவாத அமைப்பு என குறிப்பிட்டுள்ள ஃபேஸ்புக், அவர்களுக்கு ஆதரவாக பதிவிடப்படும் அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
தாலிபன் உள்ளடக்கங்களை நீக்குவதற்காக ஆப்கன் மொழிகள் மற்றும் அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் உள்ள குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சட்டங்களின் படி தாலிபன்கள் தீவிரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது,அதன் அடிப்படையில் தாலிபன் மற்றும் அதன் தொடர்பானவர்களின் பதிவுகளை தடை செய்வதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
டுவிட்டரையும் தாலிபன்கள் பெருமளவில் பயன்படுத்தி வரும் நிலையில், அந்த நிறுவனம் தாலிபன்களை தடை செய்வது குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.