​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இயற்கை காய்கறிகளை கொண்டு உணவு தயாரிக்க திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் முடிவு

Published : Aug 17, 2021 2:48 PM

இயற்கை காய்கறிகளை கொண்டு உணவு தயாரிக்க திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் முடிவு

Aug 17, 2021 2:48 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு சமைத்து பக்தர்களுக்கு வழங்கும் உணவிற்கு  குறைந்த அளவிலான கட்டணம் பெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

அங்கு “சம்பிரதாய போஜனம்” என்ற பெயரில் 4 இடங்களில் கேன்டீன்  அமைத்து இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு தயார் செய்யும் உணவுகளை விற்பனை செய்யவதுடன், வழக்கம் போல், நடைபெறும் அன்னதானமும் வழங்கப்படும் என்றும், இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளதாகவும், தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.