30 ஆண்டுகளில் முதன்முறையாக, நாட்டில் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்துள்ளது - உள்துறை அமைச்சகம்
Published : Aug 17, 2021 2:30 PM
30 ஆண்டுகளில் முதன்முறையாக, நாட்டில் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்துள்ளது - உள்துறை அமைச்சகம்
Aug 17, 2021 2:30 PM
30 ஆண்டுகளில் முதன்முறையாக, நாட்டில் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் எட்டு மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்கள் இடது சாரி தீவிரவாதத்தால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டவையாக கண்டறியப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார்,ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளன.
அதே நேரம் காலங்காலமாக மிக அதிகமாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரின் 14 மாவட்டங்களில் அவர்கள் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரவிக்கின்றன.