செப்டம்பர் ஒன்று முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் அரசு தேர்வுகள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற துணைத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியினை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தபட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை கலந்து கொள்கிறார்.