சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள wifi வசதியை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை பகிர்தல்,வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீரின் அளவை கண்டறிதல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க இந்த ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து OTP மூலம் 30 நிமிடங்களுக்கு இலவசமாக wifi வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.