​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெஸ்லா கார்களில் ஆட்டோ பைலட் முறை விபத்துகளுக்கு காரணமா?

Published : Aug 17, 2021 9:59 AM



டெஸ்லா கார்களில் ஆட்டோ பைலட் முறை விபத்துகளுக்கு காரணமா?

Aug 17, 2021 9:59 AM

டெஸ்லா நிறுவனத்தின்  கார்களில் தொடர்ந்து ஏற்பட்ட விபத்துகள் குறித்த விசாரணையை அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிர்வாகமான NHTSA தொடங்கியுள்ளது.

2018ம் ஆண்டுமுதல் 11 முறை கார் விபத்துகள் நேரிட்டதையடுத்து அதன் ஆட்டோபைலட் தானியங்கி முறையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. நீண்ட தூரம் கார் ஓட்டுபவர் காரை தானாக இயங்க வைக்கும் தொழில்நுட்பத்தை ஆட்டோ பைலட் என்பார்கள்.

பெரும்பாலான விபத்துகள் இருட்டிலோ, எமர்ஜென்சி மின்விளக்குகளை எரிய விட்டதிலோ சாலையில் ஏற்பட்ட பழுதுகளாலோ ஏற்பட்டவை என்று கருதப்படுகிறது.