ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, ஆப்கானிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் குறித்து கவுன்சில் தனது கவலையை வெளிப்படுத்தியது. மேலும் வன்முறையை உடனே நிறுத்தவும் அனைத்து பிரிவு மக்களையும் உள்ளடக்கிய புதிய ஜனநாயக அரசாங்கத்தை நிறுவவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கு நிலவும் அதிகார நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு வரும்படியும் ஆப்கானிஸ்தானுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.