தாலிபான்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகச் சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், தங்கள் விதியை சுதந்திரமாகத் தீர்மானித்துக்கொள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உள்ள உரிமையைத் தாங்கள் மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதைத் தொடர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி வழங்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.