மத்திய அரசின் மீன்வள மசோதாவை தமிழக அரசு நிச்சயம் எதிர்க்கும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
Published : Aug 16, 2021 3:36 PM
மத்திய அரசின் மீன்வள மசோதாவை தமிழக அரசு நிச்சயம் எதிர்க்கும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
Aug 16, 2021 3:36 PM
மத்திய அரசின் மீன்வள மசோதாவை தமிழக அரசு நிச்சயம் எதிர்க்கும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மீன்வள மசோதா மூலம், இந்திய கடற்பகுதி மூன்றாக பிரிக்கப்படவுள்ளது. இதில் நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் தொலைவு வரையில் மட்டுமே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிக்க நேரம் நிர்ணயிப்பது உள்ளிட்ட அதிகாரங்களும் மாநில அரசின் கைகளிலிருந்து மத்திய அரசின் கைகளுக்கு மாறும் சூழலும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழக மீனவர்களை பாதிக்கக்கூடிய வகையில் மீன் வள மசோதா இருப்பதாகவும், ஏற்கனவே இந்த மசோதாவை திரும்பப் பெறவும், திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.