​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓராண்டுக்குப் பிறகு ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு : "தேங்க்யூ ஜகன் மாமா" என்ற பதாகைகளை ஏந்தி நன்றி சொன்ன குழந்தைகள்

Published : Aug 16, 2021 3:18 PM

ஓராண்டுக்குப் பிறகு ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு : "தேங்க்யூ ஜகன் மாமா" என்ற பதாகைகளை ஏந்தி நன்றி சொன்ன குழந்தைகள்

Aug 16, 2021 3:18 PM

ந்திராவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றுக்குச் சென்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடினார்.

“தேங்க்யூ ஜகன் மாமா” என்ற பதாகைகளை ஏந்தியவாறு அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு முன்பிருந்த பலகையில் “ஆல் த வெரி பெஸ்ட்” என எழுதி முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து கல்வி காணிக்கை என்ற பெயரில் நோட்டு, புத்தகம், மூன்று ஜோடி சீருடைகள், ஒரு ஜோடி ஷூ, இரண்டு ஜோடி சாக்ஸ், பெல்ட் மற்றும் புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் வழங்கினார்.