டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக வரும் மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 32 விவசாய அமைப்புகளின் கூட்டு அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, தனது அடுத்த இரு மாதங்களுக்கான செயல் திட்டத்தை வெளியிட்டது.
அதன்படி, டெல்லியில் போராட்டம் தொடரும் எனவும், டெல்லிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது எனவும் கூறப்பட்டுள்ளது. மே மாதத்தில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்வது என்றும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.