தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500- ஐ தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 579 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 527 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், மேலும் 969 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை, செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதாகவும்,8 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.