சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான சிறப்பு பேருந்து சேவை நாளை முதல் தொடங்குகிறது.
இதற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் செய்துள்ள சிறப்பு ஏற்பாட்டின் படி, 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 14,215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
WWW.tnstc.in என்ற இணைய தளத்திலோ tnstc செயலி மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.