புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மைக் சரியாக இயங்காததால் அவர் டென்சன் ஆகி டார்ச் லைட்டை வீசி எறிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
திங்களன்று ஆம்பூர் சாலையில் கமல் பேச தொடங்கியபோது, மைக் வேலை செய்யவில்லை. தொடர்ந்து 15 நிமிடம் முயன்ற பின்னரும் மைக் வேலை செய்யாததால் அவரால் பேச முடியவில்லை.
அதனால் டார்ச் லைட்டை காட்டி, அங்கு கூடியிருந்த மக்களிடம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் கையில் வைத்திருந்த டார்ச்லைட்டை வேகமாக வேனுக்குள் வீசியடித்தார்.