நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. விஜயின் 65வது திரைப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.