புதுச்சேரி வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி ? - உயர் நீதிமன்றம் கேள்வி
Published : Mar 31, 2021 3:34 PM
புதுச்சேரி வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி ? - உயர் நீதிமன்றம் கேள்வி
Mar 31, 2021 3:34 PM
புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி என பா.ஜ.க.வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சியினர் மூலம் சேகரிக்கப்பட்ட மொபைல் எண்களை ஏஜென்சிகளுக்கு அளித்து அதன் மூலம் பிரச்சாரம் செய்ததாக பா.ஜ.க. தரப்பில் பதிலளிக்கப்பட்டது.