மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெறும் லிப் சர்வீஸ் அரசியல்வாதி என்று வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், யாகாவாராயினும் நாகாப்போம் என்று கமல் பதிலளித்துள்ளார்.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரடி விவாதத்திற்கு வானதி அழைத்திருந்தார். அதற்கு வானதி போன்ற துக்கடா தலைவர்களுடன் தங்கள் தலைவர் கமல் விவாதத்திற்கு வரமாட்டார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை வெளியிட்டது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய வானதி சீனிவாசன், கமல் லிப் சர்வீஸ் மட்டுமே செய்வதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல், எதிர் தரப்பை எதிரி தரப்பு என கருதுவது முதிர்ச்சியின்மை என்று தெரிவித்துள்ளார். வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாலாபுறமும் நாராசமாய் ஒலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று, தலைமுறை நம்மை கவனிக்கிறது என்றும் கமல் பதிவிட்டுள்ளார்.
வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 31, 2021