​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

Published : Mar 31, 2021 1:23 PM

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

Mar 31, 2021 1:23 PM

மிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் எனவும், ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்திற்கு தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து வீசுவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்கள் உட்பட 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் நண்பகல் 12 மணியில் இருந்து 4 மணிவரை திறந்தவெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அந்தமான் மற்றும் மன்னார்வளைகுடா  பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.