​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென் மாவட்டங்கள் மற்றும் சென்னைக்கு செல்லும் ரயில்கள் 8 மணி நேரம் தாமதம்

Published : Mar 31, 2021 11:02 AM

தென் மாவட்டங்கள் மற்றும் சென்னைக்கு செல்லும் ரயில்கள் 8 மணி நேரம் தாமதம்

Mar 31, 2021 11:02 AM

திருமங்கலம் - துலுக்கபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னைக்கு செல்லும் ரயில்கள் 8 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக செல்வதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

புதிய இரட்டை ரயில் பாதை  அமைக்கும் பணியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி மயம் ஆக்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் சென்னை செல்லும் கொல்லம், பொதிகை, கன்னியாகுமரி,  முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரயில்கள் மற்றும் நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில் மதுரை, கூடல் நகர் போன்ற ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு 8 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும்  கொல்லம், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.