தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Published : Mar 31, 2021 10:28 AM
தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Mar 31, 2021 10:28 AM
தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து வீசுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.