இந்தியாவின் 2021 பொருளாதார உற்பத்தி 2019 ஆண்டை விட குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார சமூக ஆய்வு என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஐநாவில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆய்வில், கொரோனா பெருந்தொற்று காரணத்தால் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 7 விழுக்காடு சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு குறைவாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.