​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா நிலவரம் மோசமாகி முழு நாடும் ஆபத்தில் உள்ளது: மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு

Published : Mar 31, 2021 7:26 AM



கொரோனா நிலவரம் மோசமாகி முழு நாடும் ஆபத்தில் உள்ளது: மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு

Mar 31, 2021 7:26 AM

கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் ஆபத்தில் இருப்பதாகவும் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பல மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துப் பரவி வருகிறது என்று கூறியுள்ளார். சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களின் நிலவரம் மிகவும் கவலையளிக்கும் விதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், கொரோனா பாதிப்பில் புனே முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.மும்பை, நாசிக், நாக்பூர் போன்ற மகாராஷ்ட்ராவின் எட்டு மாவட்டங்களும், டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு கர்நாடகா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.