முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக அறிக்கை தருமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதை அடுத்து மாவட்டத் தேர்தல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்படுப்பட்டுள்ளது.