கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி
Published : Mar 30, 2021 10:11 PM
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
95 வயதான நல்லக்கண்ணுவுக்கும், அவரது மகள் ஆண்டாள், பேரன், பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் நல்லக்கண்ணுவுக்கு சென்னை ராஜுவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் நுரையீரலில் லேசான பாதிப்பு இருப்பது உறுதியானதை அடுத்து அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகள், பேரன், பேத்தி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.