தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 1463 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண் உள்பட சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், மேலும் 874 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், கர்நாடகாவில் இருந்து வந்த 8 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுளள்து. ஒரே நாளில் 82 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 14 ஆயிரத்து 846 பேர் சிகிச்சையில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.