​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.59,000 க்கு ஏலம் போன முருகனின் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை..!

Published : Mar 30, 2021 6:00 PM

ரூ.59,000 க்கு ஏலம் போன முருகனின் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை..!

Mar 30, 2021 6:00 PM

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகேவுள்ள பழமையான ரத்தினவேல் முருகன் கோவிலின் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை ஒன்று 59 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

முருகனின் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் ஆண்டாண்டு காலமாக ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஒன்பது எலுமிச்சை பழம் வேலில் சொருகப்பட்டது. முதல் நாள் பழத்தை கடலூரை சேர்ந்த தம்பதி 59 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.

2 ஆம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய், 3 ஆம் நாள் பழம் 25 ஆயிரம் ரூபாய் என 9 பழமும் ஒரு 43 ஆயிரத்து லட்சத்து 900 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி, குடும்ப பிரச்சனை தீரும் என்பது ஐதீகம்.