தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, ஆதரவு அலை வீசுவதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணியின் 30 வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், வருகிறது சட்டமன்ற தேர்தல், வித்தியாசமான தேர்தல் என்றார்.
கடந்த முறை வந்தபோது அளித்த உறுதிமொழியின்படி, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை வசதி, உட்கட்டமைப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெறுவதாக, பிரதமர் கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஆன்மீகமும், அதன் பெருமையும் நிரம்பியிருப்பதாக குறிப்பிட்ட அவர், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்காக, உலக தரத்தினாலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.