​​ வான் பாதுகாப்பில் புதிய தொழில் நுட்பம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வான் பாதுகாப்பில் புதிய தொழில் நுட்பம்

Published : Jun 08, 2018 1:51 AM

வான் பாதுகாப்பில் புதிய தொழில் நுட்பம்

Jun 08, 2018 1:51 AM

ஆளில்லா குட்டி விமானங்களை வீழ்த்தும் தொழில் நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமாக தாக்குதலை இந்திய தொழில் நுட்பத்தின் மூலமே முறியடிக்க முடியுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா குட்டி விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை பயன்படுத்தி நாட்டின் எல்லையில் உளவு பார்க்கவும், முக்கிய இடங்களில் குண்டு வைக்கவும் முடியுமென்றும், இப்படி ஒரு தாக்குதல் நடைபெறும் சூழல் உள்ளதாகவும் இந்திய உளவுத்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிகை விடுத்தது.

image

டெல்லியில் இது போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது. வான்வெளியில் உருவாகி உள்ள இந்த புதிய அபாயத்தை எதிர்கொள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனம், புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற கால்காட்கி இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், குட்டி விமானங்களை முறியடிக்கும் புதிய கருவி அடுத்த இரு மாதங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்பட உள்ளது என்றார்.

image

வான்வெளியிலும், எல்லைகளிலும், நாடாளுமன்றம் போன்ற முக்கிய இடங்களிலும் பாதுகாப்பிற்கு இது உதவுமென அவர் குறிப்பிட்டார். கையடக்கமான இந்த கருவியில் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல், எலக்ட்ரோ மெக்னடிக் சென்சார்கள் இருக்குமென அவர் கூறினார்.

image

விண்ணில் பறந்து கொண்டே 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்கும் இந்த கருவி, எதிரிகளின் குட்டி விமானத்தை கண்டால், தன்னுள் இருக்கும் ஜாமர் கருவியை இயக்கி, அதனை செயலிக்க செய்து விடும் என்று அவர் தெரிவித்தார்.

image

பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டால், இதற்கு பதிலாக லேசர் மூலம் எதிரிகளின் குட்டி விமானத்தை அழிக்கும் வகையிலும் மாற்றம் செய்ய முடியும் என்ற கால்காட்கி, இந்திய தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த கருவி, வான்வெளி பாதுகாப்பில் புதிய அத்தியாத்தை உருவாக்கும் என்றார். பாதுகாப்பு துறையின் குட்டி விமான பிரிவு அதிகாரியான ராமசந்திராவும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.