​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்காவிட்டால் மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - சாதுக்கள் அமைப்பு

Published : Jun 08, 2018 1:41 AM

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்காவிட்டால் மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - சாதுக்கள் அமைப்பு

Jun 08, 2018 1:41 AM

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்கா விட்டால் மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று சாதுக்கள் அமைப்பு கூறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்தை,  சாது திகம்பர அக்ஹர மஹந்த் சுரேஷ் தாஸ் தலைமையில் சாதுக்கள் மற்றும் துறவிகள் குழுவினர் சந்தித்து பேசினர்.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாதுக்கள், ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்காமல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றனர். பிரதமர் மோடி விரைவில் அயோத்திக்கு வர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பைசாபாத் வழியாக பாயும் காக்ரா நதியின் பெயரை சரயு நதி என மாற்ற வேண்டும்’ என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.