ஊர்வன வகை உயிரினங்களிலேயே மிகவும் சிறிய உயிரினத்தை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்ரிக்காவின் மடகாஸ்கர் தீவில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், பதிமூன்றரை மில்லிமீட்டர் நீள ஆண் பச்சோந்தியையும், 22 மில்லிமீட்டர் நீள பெண் பச்சோந்தியையும் கண்டு பிடித்தனர்.
அரை இன்ச்க்கும் குறைவாக, சூர்யகாந்தி மலரின் விதை அளவே உள்ள இந்த ஆண் பச்சோந்தி தான் இது வரை கண்டறியப்பட்டுள்ள ஊர்வன வகை உயிரினங்களில் மிகவும் சிறியது என அவர்கள் தெரிவித்தனர்.