​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் எங்களுடையது என 2 பெண்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Published : Feb 05, 2021 10:15 AM

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் எங்களுடையது என 2 பெண்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Feb 05, 2021 10:15 AM

யோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுடையது என 2 பெண்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில், பாபர் மசூதி விவகாரத்தில், உயர்நீதிமன்றம் சன்னி வக்பு வாரியத்திற்கு அயோத்தியில் மசூதி கட்ட வேறொரு இடத்தை ஒதுக்குமாறு தீர்ப்பளித்திருந்தது.

இதனையடுத்து மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் குடியரசு தினத்தன்று மசூதி கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டது. இந்நிலையில், இந்த 5 ஏக்கர் நிலம் தங்களுடையது என டெல்லியை சேர்ந்த ரமா ராணி மற்றும் ராணி கபூர் சகோதரிகள் இருவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.