துருக்கியில் வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாகின
Published : Feb 05, 2021 8:59 AM
துருக்கியில் வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாகின
Feb 05, 2021 8:59 AM
துருக்கியில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கு நோக்கினும் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது.
அந்நாட்டின் 3வது முக்கிய பெரிய நகரமான İzmir வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
பாலங்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.
6 மணி நேரத்தில் வழக்கமாக பெய்யும் அளவை காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதல் மழை பெய்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.