போக்குவரத்து வசதியை மேம்படுத்த ரோப்வே, கேபிள் கார் உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகம்: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
Published : Feb 05, 2021 8:50 AM
போக்குவரத்து வசதியை மேம்படுத்த ரோப்வே, கேபிள் கார் உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகம்: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
Feb 05, 2021 8:50 AM
போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் ரோப்வே, கேபிள் கார் உள்ளிட்ட புதிய போக்குவரத்து வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை போக்குவரத்துக்கு வசதியற்ற மலை, ஆறு உள்ள பகுதிகளில் கம்பிவடம் வாயிலாக பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு ரோப்வே, கேபிள் கார்கள் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மலைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய போக்குவரத்து வசதிகள் நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.