​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மியான்மரில் ஆட்சியை ஜனநாயக சக்திகளிடம் திருப்பித் தர வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்

Published : Feb 05, 2021 8:07 AM

மியான்மரில் ஆட்சியை ஜனநாயக சக்திகளிடம் திருப்பித் தர வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்

Feb 05, 2021 8:07 AM

ட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆங்சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைத்துள்ளது. பர்மிய ராணுவம் தான் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய அரசு அதிகாரத்தை ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்டவர்களிடத்தில் மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அரசு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜோ பைடன் சீனா ஏற்படுத்தி வரும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்றும் கூறினார். அமெரிக்காவின் நலன் கருதி சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜோ பைடன் கூறினார்.