​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆங் சாங் சூகியை விடுதலை செய்யுமாறு மியான்மர் இராணுவத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

Published : Feb 05, 2021 7:18 AM

ஆங் சாங் சூகியை விடுதலை செய்யுமாறு மியான்மர் இராணுவத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

Feb 05, 2021 7:18 AM

ங் சாங் சூகியை உடனடியாக விடுதலை செய்யுமாறு மியான்மர் இராணுவத்திற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தியது, தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் வேதனைக்குரிய செயல் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஜனநாயக முறைக்கு ஆதரவளிக்கும் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில், மனித உரிமைகள் காக்கப்படும் முக்கியத்துவத்தையும், அடிப்படை சுதந்திரம் வழங்குவது தொடர்பாகவும் அழுத்தமாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆங் சாங் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மிண்ட்டை உடனடியாக விடுதலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.