​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் கிடையாது - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

Published : Feb 05, 2021 6:38 AM

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் கிடையாது - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

Feb 05, 2021 6:38 AM

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், ஊழல்வாதிகளும், வன்முறையாளர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைவதாக குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.