விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கங்கனாவின் சர்ச்சைக்குரிய டுவிட்களை நீக்கியது டுவிட்டர் நிறுவனம்
Published : Feb 04, 2021 5:24 PM
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கங்கனாவின் சர்ச்சைக்குரிய டுவிட்களை நீக்கியது டுவிட்டர் நிறுவனம்
Feb 04, 2021 5:24 PM
விதிகளை மீறி வெறுப்பு பேச்சுக்களை பதிவு செய்ததாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் இரண்டு டுவிட்களை, டுவிட்டர் நிறுவனம் நீக்கி விட்டது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அமெரிக்க பாடகி ரிஹானாவை கடுமையாக சாடி கங்கனா ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். அதே போன்று சுவீடனின் சுற்றுப்புற ஆர்வலர் கிரேட்ட தர்ன்பர்க்கை ஒரு எலி என்று வர்ணித்தும் அவர் டுவிட் செய்தார்.
இந்த இரண்டு டுவிட் பதிவுகளையும் இரண்டு மணி நேரத்திற்குள் நீகிகிவிட்டதாக அறிக்கை ஒன்றில் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போராட்டம் நடத்தும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்று ஒரு டுவிட்டர் பதிவில் வசை பாடிய கங்கனா, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பாடகி ரிஹானாவை ஒரு முட்டாள் என்றும் டுவிட் செய்தார். இது போன்ற பதிவுகள் டுவிட்டரின் விதிகளுக்கு எதிரானவை என்பதால் அவை உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.