சுகாதாரப் பணியாளர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி வரும் 13 ஆம் தேதி முதல் போடப்படும்-மத்திய அரசு
Published : Feb 04, 2021 4:19 PM
சுகாதாரப் பணியாளர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி வரும் 13 ஆம் தேதி முதல் போடப்படும்-மத்திய அரசு
Feb 04, 2021 4:19 PM
சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி வரும் 13 ஆம் தேதி முதல் போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், இதுவரை லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 8563 பேருக்கு மட்டுமே எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது 0.18 சதவீதம் மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.