ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கோச்சார் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் கருத்து
Published : Feb 04, 2021 3:30 PM
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கோச்சார் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் கருத்து
Feb 04, 2021 3:30 PM
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கோச்சார் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ஆயிரத்து 875 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்தார். இது 2017ஆம் ஆண்டு வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
இதற்குக் கைம்மாறாக வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்திடம் 64 கோடி ரூபாயைப் பல்வேறு வகைகளில் சாந்தா கோச்சார் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் சாந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகிய மூவருக்கும் எதிராகப் பணமோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்கப் போதுமான சான்றுகள் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.