அமெரிக்காவில் உள்ள துணைநிறுவனத்தை ரூ.1823 கோடிக்கு விற்கும் ரிலையன்ஸ்
Published : Feb 04, 2021 1:48 PM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது துணை நிறுவனத்தை ஆயிரத்து 823 கோடி ரூபாய்க்கு விற்க உடன்பாடு செய்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ரிலையன்ஸ் மார்சலஸ் என்னும் பெயரில் சேல் எரிவாயு எடுக்கும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பங்குகளையும் நார்த்தர்ன் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனத்திடம் ஆயிரத்து 823 கோடி ரூபாய்க்கு விற்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
அத்துடன் நார்த்தர்ன் ஆயில் அண்டு கேஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1020 ரூபாய் என்னும் விலையில் 32 லட்சத்து ஐம்பதாயிரம் பங்குகளை அடுத்த ஏழாண்டுகளில் விலைக்கு வாங்கவும் ரிலையன்சுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட உள்ளது.