உலகிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக நடந்த முக, கைகள் மாற்று அறுவை சிகிச்சை
Published : Feb 04, 2021 1:38 PM
கார் விபத்தில் கோரமாக காயமடைந்த அமெரிக்க இளைஞர் ஒருவருக்கு உலகிலேயே முதன்முறையாக இரண்டு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சியை சேர்ந்த ஜோ டிமியோ கடந்த 2018 ல் நடந்த கார் விபத்தில் சிக்கி 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்தில் அவரது விரல்கள் துண்டானதுடன், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உதடுகளும், கண் இமைகளும் எரிந்து விட்டன.
இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 மணி நேரம் முக மாற்று-கைகள் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர். 96 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் இந்த சாதனையை செய்துள்ளனர். நியூ ஜெர்ஸி இளைஞருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.