​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் THAMIZH NAADU என மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

Published : Feb 04, 2021 12:56 PM

தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் THAMIZH NAADU என மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

Feb 04, 2021 12:56 PM

தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது சரியான உச்சரிப்பு வரும் வகையில் மாற்றக் கோரிய மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

செல்வக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு என்பதன் ஆங்கிலச் சொல் டமில் நடு என உச்சரிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சரியான உச்சரிப்பு வரும் வகையில் "THAMIZH NAADU" என மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வெற்றி நடை போடும் தமிழகம் என்னும் அரசின் விளம்பரத்தில் THAMIZH என்றே ஒளிபரப்பப்படுவதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், முதன்மைச் செயலர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.