தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் பனிமூட்டத்துடனும் காணப்படும்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.