சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்... தமிழகம் வருகிறார் இந்திய தேர்தல் ஆணையர்
Published : Feb 04, 2021 11:42 AM
சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்... தமிழகம் வருகிறார் இந்திய தேர்தல் ஆணையர்
Feb 04, 2021 11:42 AM
சட்டமன்ற தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் வந்திருந்தனர்.
இந்த நிலையில், வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் சுனில் அரோரா, இரண்டு நாட்கள் இங்கு தங்கி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும், தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் துறை சார்ந்த மூத்த அரசு அதிகாரிகளுடன் சுனில் அரோரா ஆலோசனையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.