மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைதள சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, திங்கட் கிழமை ஆங் சான் சூகி உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளை கைது செய்த ராணுவம், ஆட்சியையும் கைப்பற்றியது. அடுத்த ஓராண்டுக்கு மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களிடையே, தகவல்கள் பரவுவதை தடுக்கபிப்ரவரி 7-ம் தேதி வரை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.