​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்ட்ரா ஜெனிகாவின் 97 லட்சம் டோஸ்களில் பாதியளவுக்கு மார்ச் மாத இறுதிக்குள் இந்திய மக்களுக்கு கிடைக்கும்

Published : Feb 04, 2021 10:00 AM

ஆஸ்ட்ரா ஜெனிகாவின் 97 லட்சம் டோஸ்களில் பாதியளவுக்கு மார்ச் மாத இறுதிக்குள் இந்திய மக்களுக்கு கிடைக்கும்

Feb 04, 2021 10:00 AM

சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தான ஆஸ்ட்ரா ஜெனக்காவின் 97 லட்சம் டோஸ்களில் பாதியளவுக்கு மார்ச் மாத இறுதிக்குள் இந்திய மக்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர கால பயன்பாட்டுக்கு இந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் ஏழை மற்றும இந்தியா போன்ற நடுத்தர பொருளாதார வசதி மிக்க நாடுகளுக்கு 20 சதவீத கொரோனா தடுப்பு மருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் சுமார் 97 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவுக்கு கிடைக்க வாய்பபுள்ளது.

இந்தியா இதுவரை கோவாக்சின் அல்லது கோவி ஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளை சுமார் 40 லட்சம் பேருக்கு செலுத்தியுள்ளது.